விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தை!

ஹைதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் பகுதியில் ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வந்தது.

இதையடுத்து அந்த சிறுத்தை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஷம்சாபாத் பகுதியில் ஆறு இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர்.

மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட ட்ராப் கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த சிறுத்தை ஷம்சாபாத் விமான நிலைய மதில் சுவரைத் தாண்டி ஓடுபாதைக்குள் வந்து சற்று நேரம் உலாவியது.

விமான நிலைய ஓடுபாதையில் சிறுத்தை நடமாடுவதை பார்த்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் அச்சத்தில் உறைந்து போயினர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்த நிலையில் அந்த சிறுத்தை மீண்டும் மதில் சுவரை தாண்டி வெளியில் சென்று அதிகாரிகள் அமைத்த கூண்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை பிடிக்க முயன்று சிக்கிக்கொண்டது.

வனத்துறை அதிகாரிகள் வைத்திய பரிசோதனை நடத்தி அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News