திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் இருந்து பக்தர்கள் நடந்து திருப்பதி மலைக்கு செல்ல பயன்படுத்தும் ஸ்ரீவாரி மெட்டுப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான கட்டுப்பாட்டு அறை ஒன்று உள்ளது.
அங்கு நேற்று (செப்.28) நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று திடீரென்று விசிட் அடித்தது.
அங்கிருந்த நாய்கள் குரைத்ததை தொடர்ந்து பாதுகாப்பு ஊழியர்கள் சிறுத்தை வந்திருப்பதை அறிந்து கதவை தாளித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு பின் அந்த சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது.
சிறுத்தையின் விசிட் பற்றி பாதுகாப்பு ஊழியர்கள் தேவஸ்தான வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.