புதுச்சேரி தவளகுப்பம் பகுதியில் தனியார் மதுபான கடை அருகே உள்ள ஒரு விடுதியில் காதல் ஜோடிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு அவர்கள் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 25), சபிதா (வயது 21) என தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.