வீட்டு வாசலில் அமர்ந்து பானி பூரி சாப்பிட்ட பெண்ணை கட்டையால் தாக்கிய நபர்!

வீட்டு வாசல் அருகே அமர்ந்து பானி பூரி சாப்பிட்ட பெண்ணை கட்டையால் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகர் மெயின் ரோடு பகுதியில் (அக்.2) நேற்று முன் தினம் இரவு சாலையோரத்தில் தங்கி பிச்சை எடுக்கும் சிலர் பாணி பூரி கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டில் வசிக்கும் நபர் அந்த பெண்களை தகாத வார்த்தையில் பேசி திட்டியதோடு ராதா என்ற பெண்ணின் மீது தான் எடுத்து வந்த கோஸ் மூட்டையை எடுத்து மேலே போட்டுள்ளார்.

பின்னர் விட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து சரமாரியாக அந்த பெண்ணின் தலையில் தாக்கியதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுக்க சென்றபோது அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காயமடைந்த பெண்ணை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது.

அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக தற்போது மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது காயமடைந்த நபர்களுக்கு உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற மணி என்பவர் அவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதும் அவர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த சம்பவத்தில் போரூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News