திருத்தனி அருகே, மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பாபு. இவர் தனக்கு சொந்தமான வீட்டை, 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்தார்.
இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், ஆனந்த பாபு அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.