Connect with us

Raj News Tamil

பிரியாணியில் எச்சில் துப்பிய நபர்.. தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டிக் கொலை..

தமிழகம்

பிரியாணியில் எச்சில் துப்பிய நபர்.. தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டிக் கொலை..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 30 வயதாகும் இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு, வெளியே வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், சதீஷ்குமாரை சராமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, சதீஷ்குமார் தனது நண்பர்களுடன், 2 நாட்களுக்கு முன்னர், கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

அப்போது, அங்கு வந்த கும்பலால், சதீஷ்குமாரின் தட்டில் மண் பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர், அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, சதீஷ்குமாரின் தட்டில், அவர்கள் எச்சில் துப்பியுள்ளனர்.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே, பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருதரப்பும் அமைதியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இருப்பினும், கோபம் தீராத அந்த கும்பல், சதீஷ்குமார் தனியாக இருந்தபோது, அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுவரை 3 பேரை கொலை செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top