“வேலை வாங்கி தருகிறோம்” – பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்!

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் அருகே உள்ள ஜம்புகேஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் குமார். 40 வயதாகும் இவர், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்பா ஒன்றில், வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஸ்பாவில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர், சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பாலியல் தொழில் நடத்தி வருவதை உறுதி செய்த காவல்துறையினர், குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வறுமை காரணமாக, வேலை தேடி வரும் பெண்களுக்கு, வேலை தருவதாக கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 6 பெண்களை மீட்ட காவல்துறையினர், அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News