மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் விக்னேஷ்வரன். மதுரையை சேர்ந்த இவரும், சென்னையில் பணியாற்றி வரும் இளம்பெண்ணும், பேஸ்புக் மூலமாக காதலித்து வந்துள்ளனர்.
சில சமயங்களில், விக்னேஷ்வரன் சென்னைக்கு வரும்போது, இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வார்களாம். இவ்வாறு இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த இளம்பெண் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
அதாவது, திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிய அவர், விக்னேஷ்வரனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், இளம்பெண்ணின் சாதியை காரணமாக கூறிய அவர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.