பீதியில் ஷவர்மா பிரியர்கள்…! சாப்பிட்டவுடனே மயங்கி விழுந்த இளைஞர்…

கோவையை அடுத்த அன்னூரில் வசித்து வருபவர் ஆண்ட்ரூஸ், இவர் கடந்த ஞாயிறுக்கிழமை ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்திருந்தார்.கடுமையான பசியில் இருந்த ஆண்ட்ரூஸ், ஆர்டர் செய்த உணவு வந்ததுமே அறக்க பறக்க பிரித்து சாப்பிட்டுள்ளார்.

உணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு மயக்கம்,வந்தி,வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அந்த ஷவர்மா-வை அவர் முகர்ந்து பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் அஇவைகள் கெட்டுப்போன பொருட்களில் தயாரிக்கப்பட்டது என தெறிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்ட்ரூஸ் கெட்டுப்போன ஷவர்மாவையும், தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு ஷவர்மா ஆர்டர் செய்த கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விஷயம் அறிந்ததுமே அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இச்சம்பவத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். தகவல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்து வந்து சம்பந்தப்பட்ட கடையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு காலாவதியான சிக்கன் ,மசாலாபொருட்கள் போன்றவை தரமற்றமுறையில் இருந்துள்ளதை கண்டுபிடித்தனர்.வசமாக சிக்கிய ஷவர்மா கடையை தற்காலிமாக மூட உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டணர்.மேலும் சுகாதரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். இச்செய்தி அப்பகுதியில் உள்ள உணவகம் மற்றும் இறைச்சி உரிமையாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News