பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் டேமியன் ஜான்சன்(52). இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இவருடன் ஜான் வெயின்ரைட் என்ற நபரும் வசித்துவந்துள்ளார். இதில் ஜான் வெயின்ரைட் என்பவர் கடந்த 2018ம் ஆண்டில் உயிரிழந்தார்.

இதையடுத்து டேமியன் ஜான்சன் தனது நண்பர் இறந்ததை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார். ஜான்சன் அவரது உடலை அடக்கம் செய்யாமல் சுமார் இரண்டு ஆண்டுகள் பிரிசர் பெட்டியில் வைத்து பதப்படுத்தியுள்ளார். மேலும் அவரின் பென்சன் பணம் உள்ளிட்ட நிதிகளையும் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக ஜான்சன் மீது மோசடி புகார் பதியப்பட்டு வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக இறந்துபோன நண்பரின் உடலை இரண்டு ஆண்டுகள் ப்ரீசரில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.