Connect with us

Raj News Tamil

மனைவியை Swap செய்து உல்லாசம்.. காட்டிக் கொடுத்த பெண் படுகொலை.. கணவர் தற்கொலை முயற்சி..

இந்தியா

மனைவியை Swap செய்து உல்லாசம்.. காட்டிக் கொடுத்த பெண் படுகொலை.. கணவர் தற்கொலை முயற்சி..

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 33 வயது நபர், பேஸ்புக் பக்கத்தில், குழு ஒன்றில் இருந்து வந்தார். அந்த குழுவை சேர்ந்த நபர்கள், தங்களது மனைவியுடன் சேர்ந்து, அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்கள். அவ்வாறு சந்திக்கும்போது, ஒருவர் மனைவியை இன்னொருவர் Swap செய்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதற்கு அந்த இளைஞரின் மனைவி ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இருப்பினும், அவரை கட்டாயப்படுத்தி, உடலுறவில் ஈடுபட வைத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அந்த குழுவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குழுவை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண், கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது, அவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மிதந்து, படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணின் கொலை தொடர்பாக, கணவரிடம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், அங்கு விஷத்தை அருந்திய அவர், தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு, சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது இந்த வழக்கில் வேறு யாராவது குற்றவாளிகளாக இருப்பார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top