பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள பபௌலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவருக்கும், ரிங்கு குமாரி என்ற பெண்ணுக்கும், திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள், ராஜேஷ் குமாரின் அறைக்கு வந்த மனமகளின்
தங்கை, தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்தால், தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் குமார், தனது பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனை அறிந்த அவர்கள், பெண் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகவலை கேட்டு குழப்பம் அடைந்த பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.
அதில், ராஜேஷ் குமாரும், மனமகளின் தங்கையும், இதற்கு முன் பழகி வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால், காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு, ராஜேஷ் குமாருக்கு, தனது சாகோதரியுடனே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த அவர், திருமணத்தை நிறுத்திவிட்டு, ராஜேஷ் குமாரை திருமணம் செய்ய வேண்டும் அல்லது தற்கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு சென்றுள்ளார்.
தனது தங்கையின் காதல் கதையை கேட்டு மனம் உருகிய மனமகள், ராஜேஷ் குமாரை அவர் திருமணம் செய்வதற்கு ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து ஊர் திரும்பினார் மணமகன் ராஜேஷ்.