தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர் : பாதிக்கப்பட்ட நாய் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர பகத் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் ஹுட்கேஷ்வர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தெருநாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து நாயை வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நாய்க்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த நாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.