உடல் எடையால் விபரீத முடிவு எடுத்த மருத்துவ மாணவி..!

கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி(20) என்பவர் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி, விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்சம்பவ இடத்திலேயே பிரக்ருதி ஷெட்டி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்த மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறைக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், “எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதியிருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News