சென்னை : வண்டலூரில் இருந்து, பிராட்வே செல்லும் 21G மாநகர பேருந்தை டிரைவர் இளங்கோவன் என்பவரும், கண்டக்டர் கோவிந்தராஜன் என்பவரும் ஓட்டிவந்தனர். அப்போது, பஸ் ஸ்டாண்டில், பஸ்ஸை நிறுத்திவிட்டு டிப்போவுக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில் ஒரு நபர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்கியுள்ளார். மெதுவாக நகர்ந்த பேருந்து பிளாட்பாரத்தில் இருந்த இரும்பு கம்பத்தில் மோதியது. இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு இறங்கினர். வெளியில் நின்றிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்..
இதை பார்த்த பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் அந்த நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை கீழ்பாக்கம் மன நல காப்பகத்தில் அனுமதித்தனர்..
இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை பிராட்வெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.