சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே 20,வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிகாலையில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் சென்ற மர்மம் நபர்கள் பெண்ணின் வாயினை மூடி அங்கிருந்து தூக்கிக் கொண்டு தாம்பரம் ரயில்வே நிலையம் அருகே உள்ள இருட்டான பகுதிக்கு சென்று,பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி இரண்டு நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த வீரமணி(27) மணிகண்டன் (26) என தெரியவந்தது அவர்களிடம் இருந்து ஒரு பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு போன்ற 18 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பலமுறை சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் பகுதியில் அடிக்கடி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்வது போன்ற விபரீத சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.