சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில், புறநானூறு என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த திரைப்படத்தில் இருந்து, சூர்யா விலகினார். தற்போது, இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்காராவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். அதாவது, இந்த திரைப்படத்தில் குறுந்தாடி வைக்க வேண்டும் என்று சுதா கொங்காரா கூறினாராம்.
ஆனால், ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்க இருப்பதால், குறுந்தாடி வைக்க முடியாது என்று, சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டாராம். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டதாம். அந்த பிரச்சனைகள் தற்போது சரியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.