பொருட்களை வாங்குவது போல் நடித்து, திருடும் மர்மநபர்

வள்ளியூரில் தனியார் பல்பொருள் அங்காடியில் மர்மநபர் ஒருவர் பொருட்களை வாங்குவது போல் நடித்து, திருடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் தங்க நாற்கரச் சாலையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு பொருட்களை வாங்குவது போல நடித்து திருடும் காட்சி அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதேபோன்று அவர் ஒரு பிரபல துணிக்கடையிலும் திருடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கண்ட ஊழியர்கள், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்த பொருட்களை மீட்டெடுத்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்தரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்,இவர் அங்குள்ள விடுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு விடுதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடிச் சென்றதாக தெரிகிறது.

இதனிடையே, சென்னை ஆவடி அருகே தனியாக இருந்த முதியவர் சந்திரனை கத்திமுனையில் மிரட்டி கட்டிபோட்டுவிட்டு நகை மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். திருமுல்லைவாயில் குளக்கரை தெருவில் வசித்து வருபவர் சந்திரன், இவர் போர்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.