குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் டேப் ஒட்டிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மே 25-ம் தேதி பிரியா காம்ப்லே என்ற 25 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் NICU சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 11 மணி அளவில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வார்டுக்கு தாய் சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்த சவிதா என்ற நர்ஸ், அடுத்த நாள் காலை 8 மணிக்கு வாருங்கள் போதும் என கூறியுள்ளார்.

தாய் பிரியாவுக்கு நர்ஸ்சின் பேச்சில் சந்தேகம் இருந்ததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தான் தனது குழந்தையின் வாயில் டேப் ஒட்டியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தை அழுது கொண்டே இருப்பது தொந்தரவாக இருந்ததால் சத்தத்தை நிறுத்த இந்த செயலை அந்த நர்ஸ் செய்துள்ளார்.

இதையடுத்து தாய் பிரியா தனது குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக சவிதா என்ற நர்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடியும் வரை பணிக்கு திரும்பக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News