இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி.. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பல.. இறுதியில் என்ன ஆனது?

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. 55 வயதான இவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக, அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு, நேற்று காலை சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், ஊர் முழுவதும் உறவினர்கள் தேடியுள்ளனர். இருப்பினும், தேன்மொழி கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாயமான மூதாட்டியை தேடி வந்தனர். அவ்வாறு தேடியதில், கட்டுமான பணி நடக்கும் பகுதியில், தேன்மொழி சடலமாக கிடப்பது, காவல்துறையினருக்கு தெரியவந்தது.

தகவல் அறிந்து, காவல்துறையினர் அங்கு வருவதற்குள், மூதாட்டியின் உறவினர்கள் அங்கு கூடி, குற்றவாளியை கைது செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காவல்துறையினர் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தேன்மொழியின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில், இன்னொரு நபர் உயிரிழந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News