ஆம்பூர் அருகே, வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த நபர், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் நந்துநாத். இவர், வந்தே பாரத் ரயில் மூலமாக, சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று பயணம் செய்தார்.
இந்நிலையில், ஆம்பூர் பகுதி வழியாக ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், கிருஷ்ணனை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.