கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரை ஓட்டிச் சென்றவர், “எதற்காக என்னை நிறுத்தினீர்கள்.. என்னிடம் எல்லா பேப்பர்ஸ்களும் பக்காவாக இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். அதன் பிறகுதான் அது ரயில் தண்டவாளம் என்பது அந்த ஓட்டுனருக்கு புரிந்துள்ளது.
காரை ஓட்டி சென்றவர் மதுபோதையில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீஸார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தண்டவாளத்தில் இருந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கண்ணூரில் உள்ள அஞ்சரக்கண்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது.