சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் பெயரில் தனிப்படை காவல்துறையினர் கருமந்துறை பகுதியில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
அப்போது கருமந்துறை பகுதியில் கள்ள சாராயம் தயாரித்து 300 பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்த சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.
கள்ளச்சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்த பகுடுப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.