நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்த பண்டிகை படு உற்சாாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கலர் பொடி வீசியபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் தனது நண்பருக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயில் எரிந்து கொண்டிருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தீ வைத்த அந்த நபரை வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.