அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆக இருப்பதாக, தகவல் ஒன்று பரவி வருகிறது.
மேலும், அஜித்தும், அனிருத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும், வைரலாகி வந்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த அப்டேட்கள் வந்ததால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, முதல் பாடல் குறித்து பரவிய தகவல் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
மேலும், அனிருத்தும், அஜித்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படம், ஏ.ஐ. மூலமாக உருவாக்கப்பட்டது என்றும், கூறப்படுகிறது. இதனால், சிறிது நேரம் மட்டுமே சந்தோஷமாக இருந்த ரசிகர்கள், மீண்டும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.