மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ.. சிக்கலில் சிக்கிய ஹர்பஜன் சிங்..

முன்னாள் கிரிக்கெட் சேம்பியன்களுக்காக, பிரத்யேகமாக போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் உள்ள முன்னாள் வீரர்கள் கலந்துக் கொள்வார்கள்.

இந்த சேம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அந்த வீடியோவில், மாற்றுத் திறனாளிகளை இழிவுப்படுத்தும் வகையில் அவர்கள் நடந்துக் கொண்டனர். இந்த வீடியோ, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்புக்கான தேசிய அமைப்பான NCPEDP-யின் எக்ஸ்கியூட்டிவ் இயக்குநர் அர்மன் அலி, காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ஆர்ட்டிகள் 21, மாற்றுத்திறனாளி மக்களுக்கான உரிமை சட்டம் பிரிவு 92 ஆகியவற்றை, அந்த வீடியோவில் மீறியிருப்பதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் நிறுவனமும், தங்களது பயனர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருந்துள்ளது. எனவே, மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குநருமான சத்யா தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய பரபரப்பை அந்த வீடியோ ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹர்பஜன் சிங், தனது எக்ஸ் பக்கத்தில், தன்பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான பதிவில், “யாரையும் புண்படுத்தும் என்னம் எங்களுக்கு நிச்சயமாக இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், 15 நாட்கள் தொடர்ச்சியாக விளையாடியதால், எங்களது உடல் அப்படி ஆகிவிட்டது என்பதை குறிக்கவே, இந்த வீடியோவை வெளியிட்டிருந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News