2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி, இன்று சென்னையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இந்த போட்டிக்கு இடையே, ஐ.பி.எல் கோப்பைக்கும், விராட் கோலிக்கும் இடையிலான ராசியின்மை குறித்த சமூக வலைதள புதிய பதிவு ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
அதாவது, விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதே கிடையாது. இதற்கு காரணமாக, பலரும் பல விஷயங்களை கூறி வரும் நிலையில், வலைதள பயன்பாட்டாளர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “விராட் கோலி டெல்லி பகுதியை சேர்ந்தவர், அவரது குடும்பம் பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்தது, அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த பகுதிகளை சேர்ந்த எந்தவொரு அணியும், ஐ.பி.எல் போட்டியில் கோப்பையை வென்றதே கிடையாது.
இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், விராட் கோலி கடந்த 2021-ஆம் ஆண்டு தான் மும்பை பகுதிக்கு குடிபெயர்ந்திருந்தார். அதில் இருந்து, மும்பை அணியும் எந்தவொரு கோப்பையும் வெல்லவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு, இணையத்தில் பலரது கவனத்தையும் வென்று, வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும், ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் இடையே, அவ்வப்போது கருத்து மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த மோதல், இந்த முறை சற்று அதிகமாகவே இருந்தது.
சி.எஸ்.கே, ஆர்.சி.பி அணிகள் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியபோது, CSK தோல்வியை சந்தித்தது. இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்களை, ஆர்.சி.பி ரசிகர்கள் அவமதித்தனர்.
எனவே கடுங்கோபத்தில் இருந்த சி.எஸ்.கே ரசிகர்கள் தான், ஆர்.சி.பியின் தோல்வியை, இந்த மாதிரியான பதிவுகளை வெளியிட்டும், மீம்ஸ்களை வெளியிட்டும் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.