Connect with us

Raj News Tamil

கண்டா வரச் சொல்லுங்க…அதிமுகவை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

அரசியல்

கண்டா வரச் சொல்லுங்க…அதிமுகவை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர போஸ்டர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நாமக்கல் நாடாளுமன்ற பகுதியான சங்ககிரியில் கண்டா வரச் சொல்லுங்க எங்க தொகுதி எம்பி- ய எங்கேயும் காணவில்லை? நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் வைரலானது.

இந்த நிலையில் . திமுகவினர் அதே தலைப்பில் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் சங்கிகிரி பகுதியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற தலைப்பில் அதிமுகவையும் ,எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த போஸ்டரில் கண்டா வரச் சொல்லுங்க தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக்கூட்டணியை களத்திலேயே காணவில்லை எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top