புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டுக்குப்பம் பேருந்து நிலையம் அருகே, சாலையின் நடுவே உள்ள இடைவெளியில் சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையின் மறுபக்கத்தில் திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சரவணன் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்கில் சென்றவர் மீது மோதிய தனியார் பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்#Puduchrry #BikeAccident #CCTV #RajNewsTamil pic.twitter.com/2Mk6vi09Lj
— Raj News Tamil (@rajnewstamil) June 23, 2023