கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த கல்லூரியில், அண்ணாமலை என்ற மாணவனும், நித்திஷ்குமார் என்ற மாணவனும், வெவ்வேறு துறைகளில் படித்து வந்துள்ளனர். வேனில் கல்லூரிக்கு சென்றபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை காதலாக நினைத்துக் கொண்ட அண்ணாமலை, நித்திஷ்குமாரிடம் நெருங்கி பழக முயன்றுள்ளார். ஆனால், அண்ணாமலையின் நோக்கத்தை புரிந்துக் கொண்ட நித்திஷ்குமார், அவரை புறக்கணித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த அண்ணாமலை, கடந்த சில தினங்களாக, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேனில் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, தன்னிடம் பேசுமாறு, அண்ணாமலை நித்திஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.
இதில், இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து, நித்திஷ்குமாரை அண்ணாமலை குத்தியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த நித்திஷ்குமார், மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அண்ணாமலையை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.