ஏ.ஆர்.முருகதாஸிற்கு அடித்த ஜாக்பாட்!

சர்க்கார் படத்திற்கு பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்-ம், விஜயும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கும், முருகதாஸிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்படத்திலிருந்து அவர் விலகினார்.

இதையடுத்து, எந்த ஹீரோவுடன் இணைவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், நடிகர் சிம்புவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து நல்ல மார்கெட்டை சிம்பு வைத்துள்ளார். ஆனால், தர்பார் படத்தின் தோல்வி காரணமாக, முருகதாஸின் மார்கெட் சற்று சரிந்துக் கிடக்கிறது. எனவே, சிம்புவை பயன்படுத்தி, பெரிய வெற்றியை கொடுப்பார் என்று திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.