மீண்டும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் தோல்வி அடைந்த காரணத்தால், 5 வருடமாக எந்தவொரு திரைப்படமும் இயக்காமல் இருந்த இவர், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதுமட்டுமின்றி, சல்மான் நடிப்பில் சிகந்தர் என்ற படத்தையும் அவர் இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பிறகு, அவர் இயக்க உள்ள அடுத்த படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, பாலிவுட்டில் அமீர் கானை வைத்து, கஜினி படத்தின் 2-ஆம் பாகத்தை எடுப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளாராம். மேலும், விக்ரமின் கந்தசாமி படத்தையும் இந்தியில் அவர் ரீமேக் செய்ய இருப்பதாகவும், தகவல் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News