நக்கலாக பேசிய கஸ்தூரி.. மரியாதையாக பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான்..

சென்னையில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, இந்தியில் பேசினார்.

இதனை கவனித்த ஏ.ஆர்.ரகுமான், “இந்தியில் பேச வேண்டாம்.. தமிழில் பேசு” என்று கூறினார். அதற்கு, “எனக்கு தமிழில் சரளமாக பேச வராது.. நான் ஆங்கிலத்தில் வேண்டுமானால் பேசட்டுமா” என்று கூறினார்.

இதுதொடர்பான வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, “ஏ.ஆர்.ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? அவரது தாய் மொழி என்ன? என்று நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு, காதலுக்கு மரியாதை என்று இரண்டே வார்த்தைகளில் நாகரீகமாக ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்தார்.

RELATED ARTICLES

Recent News