விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி!

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர், சாய்ரா பானு என்பவரை, கடந்த 1995-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதி, 29 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்று தங்களது விவாகரத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரகுமான், திருமண வாழ்வு 30 ஆண்டுகளை கடக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், எதிர்பார்க்காத ஒரு முடிவு வந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும், உடைந்த இதயங்களின் எடையால், கடவுளின் சிம்மாசனமும் நடுக்கம் அடைந்துவிடும் என்றும், அவர் தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சாய்ரா பானுவின் வழக்கறிஞர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பல வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, தனது கணவர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். உணர்ச்சி ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஆழமான காதல் இருந்தபோதிலும், கடக்க முடியாத இடைவெளியை சில துயரங்கள் ஏற்படுத்திவிட்டதாக, தம்பதியினர் அறிந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடுமையான நேரத்தில், தங்களது முடிவை, பொதுமக்கள் புரிந்துக் கொண்டு, பிரைவசியை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் இந்த முடிவு குறித்து, அவர்களது மகன் அமீன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்த சமயத்தில், எங்களது தனியுரிமையை தயவு செய்து மதியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சமூக வலைதள பதிவுகளை பார்த்த ரசிகர்கள், அவர்கள் அனைவருக்கும் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News