இசை என்ற கலையில், உலகம் முழுவதும் புகழ்பெற்ற தமிழர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் மீது தீராத பற்றுக் கொண்ட இவர், பொதுவெளியில் அதனை பல்வேறு முறை வெளிக்காட்டியும் இருக்கிறார்.
இவ்வாறு இருக்க, ஏ.ஆர்.ரகுமான் தனது தமிழ் மீதான பற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதாவது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழுக்கான டிஜிட்டல் நினைவுச் சின்னத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த டிஜிட்டல் நினைவுச் சின்னத்தில், தமிழ் கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலான பாடல்கள், குறும்படங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த டிஜிட்டல் நினைவுச் சின்னம், எதிர்காலத்தில் கட்டிடமாக வரக்கூடும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழின் புகழை உலகறிய செய்ய அவர் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.