ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யாவின் 45-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருப்பதாகவும், முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதாகவும், அவருக்கு பதில் சாய் அபயங்கர் என்ற இளம் இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் ஏன் விலகினார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ள படங்களுக்கு, முதலில் இசையமைத்து கொடுத்துவிடலாம் என்ற முடிவில், ஏ.ஆர்.ரகுமான் தற்போது உள்ளாராம்.
இதனால், 4 மாதங்களுக்கு பிறகு, சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பதாக அவர் கூறியுள்ளாராம். ஆனால், படப்பிடிப்பை உடனே தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், படக்குழுவினர் இசையமைப்பாளரை மாற்றிவிட்டார்களாம்.