மலேசிய பிரதமரை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்!

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆா்.ரகுமான். இவர், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியை புரமோஷன் செய்யும் வகையில், இன்று கோலாம்பூருக்கு சென்றிருந்தார். அப்போது, அவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வரவேற்றனர்.

இதற்கிடையே, அந்நாட்டின் பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிமை, அவரது அலுவலகத்தில், இன்று ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இசை, மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, கலாச்சார பரிமாற்றங்களின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News