Connect with us

Raj News Tamil

“அந்த தண்ணி என் தண்ணி இல்ல” – வடிவேலு பாணியில் கதறிய ஏ.ஆர்.ரகுமான்!

சினிமா

“அந்த தண்ணி என் தண்ணி இல்ல” – வடிவேலு பாணியில் கதறிய ஏ.ஆர்.ரகுமான்!

கணேஷ் பாபு இயக்கத்தில், கவின் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் டாடா. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல லாபத்தை பெற்றிருந்தது.

இந்த படத்தின் இயக்குநர், தற்போது துருவ் விக்ரமை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.

அதற்கு விளக்கம் அளித்துள்ள ரகுமான், அந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், அந்த படத்திற்கு நான் இசையமைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், துருவ் விக்ரமுக்கும், அப்படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top