தலைக்கவசம் அணிந்து வருபவருக்கு ரெயின் கோட்!

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களை பாராட்டி ரெயின் கோட் வழங்கி வாழ்த்தினார்.

தருமபுரி நான்கு ரோடு சாலை சந்திப்பில், போக்குவரத்து காவலர்களும் தன்னார்வலர்களும் இணைந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது மழைக்காலம் என்பதால் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை பாராட்டி, ரெயின் கோட் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என எல்லோருக்கும் அறிவுறுத்தினர்.

RELATED ARTICLES

Recent News