கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஆக.30) குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி (33) இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் காலை 12 மணி அளவில் ஒரு போண்டா ஒரு பருப்பு வடை வாங்கி உள்ளார்.
அதில் பருப்பு வடை பாதி சாப்பிட்டு விட்டு பார்க்கையில் உள்ளே எலி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது அது ஒன்றும் செய்யாது சிறிய எலிதான் என்று கூறியுள்ளார்.
மேலும் இதனை தட்டி கேட்ட கார்த்தி உரிமையாளர் பாபுவிடம் முறையிட்ட போது கண்டும் காணாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடையின் பொருட்களை கைப்பற்றி கடைசி சீல் வைத்தனர்.
பாதிக்கப்பட்ட கார்த்திக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குளித்தலை கடம்பர் கோவில் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு #karur #rat #teashop #rajnewstamil pic.twitter.com/I54vapLW4m
— Raj News Tamil (@rajnewstamil) August 30, 2024