சின்னத்திரையில் பிரபலமான காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வந்தவர் சந்தானம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, மன்மதன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என்று பல்வேறு நடிகர்களுடன், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது வரை ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதிய அவதாரம் ஒன்றை அவர் எடுக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, சந்தானம் இயக்குநராக களமிறங்க உள்ளாராம்.