இரண்டு டாட்டா ஏசிகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் படுகாயம் ஒரு பெண்ணின் கைத்துண்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
பட்டுக்கோட்டை அருகே உள்ள உலையகுன்னம் கிராமத்திலிருந்து புலவஞ்சி கிராமத்திற்கு, டாட்டா ஏசி வாகனம் மூலம் 10க்கும் மேற்பட்டோர் துக்க நிகழச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு டாட்டா ஏசி வாகனம், நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் 1 பெண்னின் கை துண்டாக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு பெண் சுய நினைவு இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளனர்.
இது குறித்து மதுக்கூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.