ஒவ்வொரு கோலுக்கும் ஒவ்வொரு மரக்கன்றுகள்! ஆசிய போட்டியில் அசத்தல் ஐடியா!

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக மேம்பாட்டு ஆணைக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

RELATED ARTICLES

Recent News