ஐந்தருவி, சிற்றருவி, பழைய அருவி, புலி அருவி, மெயின் அருவி என பல்வேறு அருவிகளை கொண்ட குற்றாலத்திற்கு பல மாவட்டங்களிலிருந்தும் சுற்றலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
வார இறுதி நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.