சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் ஆறு மாத ஆண் குழந்தை சடலமானது மிதந்துள்ளது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் குழந்தையை கொலை செய்து தூக்கி வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.