சென்னை மாநகராட்சி 145-வது வார்டில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீரென பாம்பு புகுந்துள்ளதாக கோயம்பேடு தீ அணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உணவகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் தேடி பார்த்தனர். அப்போது அங்கு 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பாம்பு உள்ளே வந்ததை கண்டு அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் மற்றும், அம்மா உணவக ஊழியர்கள் மத்தியில் அச்சம் மற்றும் பரபரப்பை ஏற்பட்டது.