கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள ஓடந்துறை என்னும் பகுதியில் (ஆக.17) இன்று காலை பாம்பு ஒன்று அங்கிருந்த உயரழுத்த மின்கம்பி வழியே பிண்ணி பிணைந்தபடி பயணம் செய்வதை கண்ட மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மின்கம்பியில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்து விடுமோ என பதற்றத்துடன் பார்த்துள்ளனர். ஆனால் பாம்பு கீழே விழாமல் மறுபுறம் இருந்த மின்கம்பம் வழியே அருகில் இருந்த மரத்தில் ஏறி மறைந்து விட்டது.
இன்று (ஆக.17) மேட்டுப்பாளையம் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்து சரியாக காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த பாம்பு மின் கம்பி வழியே பயணித்துள்ளது.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசி மூலம் பதிவு செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.