மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்.. 30 பேர் காயம்.. கேட்டறிந்த பிரதமர்..

உத்தரபிரதேச மாநிலம் பிராயக்ராஜ் பகுதியில், உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் மகா கும்பமேளா நடத்தப்படும் வழக்கம். 45 நாட்கள் நடைபெறும் இந்த விழா, கடந்த 14-ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் 26-ஆம் தேதியோடு நிறைவடையும்.

இந்நிலையில், இன்று அமாவாசை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராட திருவிழாவில் கலந்துக் கொண்டனர். இதனால், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலால், பக்தர்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, சிலர் மயக்கம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில், 30 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் விசாரித்துள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News