Connect with us

RajNewsTamil

“ரொம்ப க்ளோஸ் -ஆ வந்துட்டோம்.. நிலவில் மனிதன்” – இஸ்ரோவின் பலே திட்டம்!

இந்தியா

“ரொம்ப க்ளோஸ் -ஆ வந்துட்டோம்.. நிலவில் மனிதன்” – இஸ்ரோவின் பலே திட்டம்!

ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது இந்தியா. குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சியில், தங்களால் முயன்ற அளவில், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவியபோது, உலகமே, இந்தியாவின் சாதனையை கண்டு வியந்து பார்த்தன. இந்நிலையில, இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சந்திரயான் 4 தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதாவது, பிரதமர் நரேந்திர மோடி, 2040-ஆம் ஆண்டுக்குள், மனிதனை நிலவில் தரையிறக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார்.

அது நடக்க வேண்டும் என்றால், நாம் பல்வேறு வகைகளில், நிலவை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சோம்நாத் தெரிவித்தார். மேலும், சந்திரயான் 4-ன் முதல் கட்டமாக, ஒரு கலனை நிலவுக்கு அனுப்பி, அங்கு சில மாதிரிகளை சேகரித்து, அதனை பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், இஸ்ரோவின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டு 23-ஆம் தேதி அன்று, உலகமே வியந்து பார்க்கும் வகையில், மிகப்பெரிய இலக்காக, சந்திரயான் 3-ஐ இஸ்ரோ விண்ணில் ஏவியது. கூடுதலாக, கடந்த ஜனவரி மாதம், ஆதித்யா எல் 1 விண்கலம், ஹாலோ ஆர்பிட்டில் செலுத்தப்பட்டது.

More in இந்தியா

To Top