தருமபுரி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் அந்த மாணவி தோழிகளிடம் வயிறு வலிப்பதாக கூறிய சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளும், விடுதி காப்பாளரும் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விடுதி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், மனோஜ்(21) என்பவருடன் மாணவி லிவ்-இன் உறவில் இருந்து வந்ததும், விடுதியில் சேரும்போதே மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனோஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினருக்கு விடுதி நிர்வாகத்தினர், போலீஸார் மூலம் தகவல் தெரிவித்தனர்.
விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.